covid_fund_raise

The people of Tamil Nadu are in the grip of the terrible second wave of the Corono virus. The situation is so intense, the Chief Minister has called on Tamils abroad to help in this critical time. A group of Tamil organisation in UK has united to help.

கொரோனா வைரஸின் பிடியின் கீழ், கடந்த மார்ச் 2020 முதல் நாம் அனைவரும் மிகவும் கடினமான காலங்களை ஐக்கிய ராஜ்யத்தில் (UK) கடந்துவிட்டோம், எனவே கொரோனா வைரஸின் மூலம் ஏற்படும் வலியையும் துன்பத்தையும் நன்கு அறிவோம்.

இந்திய துணைக் கண்டத்தில் இப்போது தமிழக மக்கள் கொரோனா தோற்றால் மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள், மேலும் இந்தியாவில் தேவையற்ற உயிர் இழப்பு குறித்து நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். இதில் வருந்த வேண்டிய செய்தி என்னவென்றால், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்து போன்ற அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இருந்தால் உயிர் இழப்புகளை தவிர்க்க முடியும்.

தினசரி புதிய இறப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை நோக்கி செல்லும் நிலைமை உள்ளது. எனவே, தமிழக முதலமைச்சர் உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழர்களும் உதவ முன்வர வேண்டும் என்கின்ற வேண்டுகோளை வைத்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய ராஜியத்தின் தமிழ் அமைப்புகளின் குழுக்கள் கைகோர்த்து, கூட்டாக நிதி திரட்டி அதன் மூலம், பல உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவர்களுக்கு தேவையான நிதியை திரட்ட உங்களின் மேலான உதவியை நாடி வந்துள்ளோம். அன்பு கூர்ந்து உங்களால் முடிந்த பண உதவியை வழங்கும்மாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

நன்றி
ஐக்கிய ராஜ்ய தமிழ் அமைப்புகளின் கூட்டணி